ஆரம்பகால அல்சைமர் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கான முதல் வகையான சிகிச்சை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாக Donanemab ஆஸ்திரேலியாவின் சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டங்களில் Donanemab உதவியாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன.
இந்த மருந்து 18 மாதங்கள் வரை நரம்பு வழியாக செலுத்தப்படும் ஊசி மூலம், நோயின் வளர்ச்சியை மெதுவாக்கி, மக்கள் நீண்ட காலத்திற்கு நல்ல தரமான வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கிறது.
தற்போது 600,000 ஆஸ்திரேலியர்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் சுமார் 450,000 பேர் தங்கள் தகுதியை மதிப்பிடுவதற்காக சோதிக்கப்பட முடியும்
இந்த மருந்தை Pharmaceutical Benefits Scheme-இல் (PBS) சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஜூலை மாதம் மதிப்பாய்வு செய்யப்படும்.
இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி என்று இதில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.