வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீட்டில் மீன் தொட்டியில் வளர்க்கப்பட்ட முதலைக் குட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மோஸ்மானில் உள்ள ஒரு ஆற்றில் முதலை கண்டுபிடிக்கப்பட்டதாக வீட்டில் இருந்த நபர் கூறினார்.
35 செ.மீ நீளமுள்ள இந்த முதலை ஒரு வருடத்திற்கும் குறைவான வயதுடையது என்று குயின்ஸ்லாந்து பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மூத்த பாதுகாப்பு அதிகாரி டேனியல் கைமர் கூறுகிறார்.
முதலையை செல்லப் பிராணியாக வளர்த்த ஒருவருக்கு $2,419 அபராதம் செலுத்த 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குட்டி முதலை வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .
விக்டோரியா மற்றும் வடக்கு மாகாணத்தில் சிறப்பு அனுமதிகளுடன் மட்டுமே முதலைகளை வளர்க்க முடியும். அதே நேரத்தில் முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது நாடு முழுவதும் பெரும்பாலும் தடைசெய்யப்பட்டுள்ளது.