சிட்னியின் தென்மேற்கில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரம் முழுவதும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்கள் வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சிட்னி ஒலிம்பிக் பார்க் மற்றும் வடக்கு பரமட்டா ஆகிய இரண்டும் 118mm மழையையும், ஹார்ன்ஸ்பியில் 116mm மழையையும், ஆபர்னில் 115mm மழையையும் பதிவு செய்துள்ளன. சிட்னி ஆய்வக பூங்காவில் 72mm மழையும், சிட்னி விமான நிலையத்தில் 60mm மழையும் பதிவாகியுள்ளன.
இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இன்று வரை பெய்த கனமழையால் நகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Cobbityயில் உள்ள Cobbity சாலை மற்றும் Cut Hill சாலையில் உள்ள தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள், Nepean நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெளியேறத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“நீங்கள் அந்தப் பகுதியிலேயே இருந்தால், மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் சிக்கிக்கொள்ள நேரிடும்” என்று NSW SES தெரிவித்துள்ளது.
இன்று காலை சிட்னி விமான நிலையத்தில் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக ஓடுபாதைகள் மூடப்பட்டன. இதனால் விமானங்கள் தாமதமாகி வருகின்றன.
Greater சிட்னி முழுவதும் பல சாலை மூடப்பட்டுள்ளதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.