NSW-வில் வெள்ளநிலை மூன்று உயிர்களைக் கொன்றுள்ளது. மேலும் இன்று மழை தெற்கே சிட்னியை நோக்கி நகர்ந்து வருவதால், காணாமல் போன ஒருவரைப் பற்றி பெரும் அச்சம் உள்ளது.
வெள்ளப் பேரழிவில் ஐந்தாவதாக ஒருவரின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும், Grafton-இற்கு தெற்கே உள்ள Nymboida-வில் கடைசியாகக் காணப்பட்ட 49 வயது ஆண் நபர் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதையும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை நேற்று இரவு தெரிவித்தது. வெள்ள அபாயம் தொடர்வதால், பல நகரங்களை மக்கள் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 177 வெள்ள மீட்புப் பணிகளை SES மேற்கொண்டது. இன்று 153 எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் 40 அவசரகால நிலையில் உள்ளன. மேலும் 87 பகுதிகள் கண்காணிப்பில் உள்ளது மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மத்திய வடக்கு கடற்கரையிலிருந்து கிழக்கு உட்புறத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீண்டுள்ளது என்றும், இன்று தெற்கு நோக்கி நகரும் என்றும், இதனால் மாநிலத்தின் தென்கிழக்கில் ஈரமான மற்றும் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வடக்கு கடற்கரையில் இன்று மாலையில் மழை குறையத் தொடங்கும் என்றாலும், வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிக்கும் என்று NSW SES மாநில கடமைத் தளபதி உதவி ஆணையர் கொலின் மலோன் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு படகுகள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல SES ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடுமையான மற்றும் கனமழை காரணமாக குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Nepean அணை இன்று காலை நிரம்பி வருவதாக SES தெரிவித்துள்ளது. மேலும் நகரத்தின் நீர் விநியோகத்திற்கான முக்கிய ஆதாரமான சிட்னியின் Warragamba அணை நிரம்பி வழியக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






