முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான இவர் கோல்ட் கோஸ்டில் நடைபெறும் ரியல் எஸ்டேட் மாநாட்டில் பேசுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
கமலா ஹாரிஸ், சிட்னியில் Balmoral-இல் உள்ள Bathers’ Pavilion-இல், தனது கணவர் Doug Emhoff உடன் நேற்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் தனது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தின் போது Balmoral-இல் உணவருந்தினார்.
நவம்பர் 2024 இல் அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து ஹாரிஸ் ஒப்பீட்டளவில் குறைவாகவே பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில் நியூயார்க்கில் நடந்த Met Gala-ல் அவர் கலந்து கொண்டார். இருப்பினும், அவர் பிரபலமான சிவப்பு கம்பளத்தில் நடக்கவில்லை, மாறாக பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தார்.