மெல்பேர்ணில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு ஷாப்பிங் சென்டர் பூட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Preston-இல் உள்ள Northland Shopping Centre-இல் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த கத்தி சண்டை சம்பவத்தைத் தொடர்ந்து 15 வயது சிறுவனும் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ் விக்டோரியாவின் கூற்றுப்படி, ஒரு டீனேஜர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் பரவி வரும் காட்சிகளில், Northland-இற்குள் ஒரு பெரிய கத்தியுடன் ஒரு ஆண் மற்ற இருவருடன் மோதுவது போல் தெரிகிறது. இதைக் கண்டு அச்சமடைந்த சிலர் வெளியே ஓடத் தொடங்கியதாகவும், சிலர் சிறு குழந்தைகளை சுமந்துகொண்டும், தள்ளுவண்டியுடன் ஓடுவதையும் காண முடிந்தது.
உடனே சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததும், போலீசார் அங்கு வந்து மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரைத் தவிர, மற்ற எட்டு இளைஞர்களையும் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.