Newsதன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் - காஸாவின் பரிதாபம்

தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் – காஸாவின் பரிதாபம்

-

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் காஸா கடுமையாக உருக்குலைந்துள்ளது. மக்கள் பசி, பட்டினியால் தவிக்கின்றனர். காஸாவில் உள்ள குழந்தைகளுக்கு 48 மணி நேரத்தில் உணவு கிடைக்கவில்லை எனில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் அவை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளுக்கு குப்பையில் உணவைத் தேடி கண்டெடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் இது தொடர்பாக கூறுகையில், “நாங்கள் பசியால் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சாப்பிடவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதுதான் எங்களுடைய அன்றாட வாழ்க்கை” என்று கூறும் அபு தெய்மா, தன் 9 வயது மகளுடன் நகரின் பல்வேறு இடங்களில் குப்பையில் உணவைத் தேடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவர் மட்டுமின்றி காஸாவில் பலரும் இவ்வாறு உணவு தேடி அழைகிறார்கள் என்பது சோகத்திற்குரிய விடயமே!

Latest news

iPhone 17 என்னென்ன வண்ணங்களில் வெளியாகிறது?

iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...

டெஸ்லாவை மிஞ்ச கடுமையாக முயற்சிக்கும் BYD

ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும்,...

ஒரு நோய்க்கு பயன்படுத்தப்படும் தூண்டுதலின் ஆரோக்கிய ஆபத்து

ஆஸ்திரேலிய மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் முதுகுத் தண்டு தூண்டுதல்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் நாள்பட்ட...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...