Breaking NewsNSW-வில் "பெண் என்றால் சமையலறையில் இருக்கவேண்டும்" என சீண்டிய நண்பன் மீது...

NSW-வில் “பெண் என்றால் சமையலறையில் இருக்கவேண்டும்” என சீண்டிய நண்பன் மீது தீவைத்த பெண்

-

பெண் என்றால் சமையலறையில் இருந்து சமைக்கவேண்டும், ஆண்களுடன் குடித்துக்கொண்டிருக்கக்கூடாது என்று கூறியதால், கோபத்தில் தன் நண்பர் மீதே பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த ஒரு பெண்.

நீண்ட கால நண்பர்களான 24 வயதான Corbie Jean Walpole என்னும் பெண்ணும் அவரது நண்பரான 23 வயதான Jake Loader கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். 

பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையிலும், இருவரும் மது மற்றும் போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், Jake, Corbie-ஐ வம்புக்கிழுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், உன்னால் ஆண்களுடன் குடிப்பதை சமாளிக்க முடியவில்லை என்றால் பேசாமல் சமையலறையில் உட்கார்ந்து சமைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதானே என்று Jake கூற, கோபத்தின் உச்சத்துக்கே சென்ற Corbie வீட்டுக்குள் சென்று பெட்ரோலை எடுத்துவந்து Jake மீது ஊற்றியுள்ளார்.

லைட்டர் ஒன்றைக் காட்டி தீவைத்துவிடுவதாக Corbie மிரட்ட, கொளுத்து பார்க்கலாம் என Jake மீண்டும் சீண்ட, அவர் மீது தீவைத்தேவிட்டார் Corbie. 

உடலின் 55 சதவிகித பாகங்களும் தீயால் எரிந்துவிட, எட்டு நாட்கள் கோமாவிலிருந்த Jake, 74 நாட்கள் தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்துள்ளார். 10 அறுவை சிகிச்சைகளுக்குப்பின்பும், அவரது வியர்வை சுரப்பிகள் வரை தீ பாதித்துவிட்டதால் கடுமையாக அவதியுற்றுவருகிறார் Jake.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, மே மாதம் 8ஆம் திகதி, நீதிமன்ற விசாரணைக்கு வந்த கோர்பி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தனது செயல்களுக்கு வருத்தமும் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கும் விசாரணைகளும் தொடர்கிறது. 

Latest news

iPhone 17 என்னென்ன வண்ணங்களில் வெளியாகிறது?

iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...

டெஸ்லாவை மிஞ்ச கடுமையாக முயற்சிக்கும் BYD

ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும்,...

ஒரு நோய்க்கு பயன்படுத்தப்படும் தூண்டுதலின் ஆரோக்கிய ஆபத்து

ஆஸ்திரேலிய மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் முதுகுத் தண்டு தூண்டுதல்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் நாள்பட்ட...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...

பறந்து கொண்டிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் தீ விபத்து

சிட்னியில் இருந்து Hobartக்கு பறந்து கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் மேல்நிலைப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் Hobart விமான நிலையத்தில்...