Newsதென்னாப்பிரிக்காவில் ஆறு வயது மகளை விற்ற பெண்

தென்னாப்பிரிக்காவில் ஆறு வயது மகளை விற்ற பெண்

-

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 35 வயதான Racquel “Kelly” Smith எனும் பெண் தனது ஆறு வயது மகளை கடத்தி விற்பனை செய்ததற்காக அவளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு வயது சிறுமியான Joshlin Smith கடந்த ஆண்டு பெப்ரவரியில் Cape Townக்கு வடக்கே 135km தொலைவில் உள்ள மீன்பிடி நகரமான Saldanha விரிகுடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

Racquel “Kelly” Smith, அவரது காதலன் Jacquen Appollis மற்றும் அவர்களது நண்பர் Steveno van Rhyn ஆகியோர் சிறுமியை கடத்தி 20,000 ரேண்டுக்கு ($1,700) விற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி, நீதிபதி Nathan Erasmus, Racquel மற்றும் அவரது இரண்டு சக குற்றவாளிகளுக்கு மனித கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர்கள் அனைவருக்கும் கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

விசாரணையின்போது குறித்த சிறுமி ஒரு பாரம்பரிய மருத்துவருக்கு விற்றதாகவும், குறித்த மருத்துவர் தனது உடல் உறுப்புகளுக்குப் பதிலாக குழந்தையைப் பெற விரும்பியுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது.

உலகிலேயே அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. மேலும் அங்கு குழந்தைகள் கடத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது. 2023-24 நிதியாண்டில் தென்னாப்பிரிக்காவில் 17,000க்கும் மேற்பட்ட கடத்தல்கள் நடந்துள்ளன, இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...