Newsஎல்லோருக்கும் AI - “எல்லோருக்கும் அவசியமான கையேடு"

எல்லோருக்கும் AI – “எல்லோருக்கும் அவசியமான கையேடு”

-

“தற்போது மனிதன் பேசும் மொழியே நிரலாக்க மொழியும் ஆகும். உலகில் உள்ள அனைவரும் இப்போது ஒரு நிரலாளர். இது AI ஆல் ஏற்பட்ட ஒரு அதியசம்” – ஜென்சன் ஹூவாங்

அன்புச் சகோதரன் ப.முகுந்தன் படைப்பாக வெளிவந்திருக்கும் எல்லோருக்கும் AI என்ற நூலைப் படித்துப் பிரமித்துப் போனேன்.

மாணவருக்கான ஒரு வழிகாட்டல் நூலாக இதைக் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், AI சார்ந்த கற்கை நெறிகளைக் கற்ற என் போன்றவருக்கும் கூட மேலதிகமான செய்திகளையும், வரலாற்றுப் பின்புலன்களையும் தாங்கிய அற்புதமானதோர் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

ஒரு பாட நூலுக்குரிய நேர்த்தியான கட்டமைப்பு, செயன்முறை விளக்கங்கள், பயிற்சி போன்ற அம்சங்களைக் கச்சிதமாக ஒவ்வொரு அலகிலும் கொடுத்தவாறே பரந்து விரிகின்றது இந்தத் தொழில் நுட்பம் குறித்த கையேடு.

ஒரு அறிவியல் நூலில் அ ந்நியமில்லாமல் தெளிந்த நீரோடை போலப் பயணிக்கும் எழுத்து, மிகச் சிறந்த வழிகாட்டியாகக் கருத்தூன்றி நிற்க உதவுகின்றது.

பக்கங்கள் தோறும் கொடுக்கப்பட்ட AI செயலிகளை நாமும் பரிசோதித்து அந்தந்தக் களங்களை அனுபவ ரீதியாகப் பயிலக் கூடிய வகையில் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

நமது இதிகாச புராணங்கள் மட்டுமன்றி மற்றைய மேலைத்தேய நாகரீகங்களில் பழங்காலத்தில் சொல்லப்பட்ட கற்பனைக்கும் எட்டாத விடயங்களை இப்போது இந்த எவ்வளவு தூரம் கண் முன் கொடுக்கின்றது என்பதை ஒப்பீட்டு உதாரங்ணங்கள் வழி பகிர்கின்றார்.

AI குறித்துச் சமூகத்தில் பேசப்படும் நிலைப்பாடுகளைக் காட்டி அவற்றின் மெய்த்தன்மை குறித்துப் பேசுகின்றார்.

Artificial Intelligence (AI) எனும் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் குறுகியகாலத்துக்குள் பரந்து விரிந்து விட்டது. மேலை நாடுகளில் இதற்கென ஒரு தனிப் பிரிவே உருவாக்கப்பட்டு அதில் நுட்பமும், ஆற்றலும் மிக்கோர் உள்வாங்கப்படுகின்றனர்.

நுகர்வோர் சமூகத்தில் நம் அன்றாட வாழ்வில் மறைமுகமாகச் செயற்பட்ட தொழில் நுட்பத்தை இன்று நம் உள்ளங் கைக்குள் வைத்து நாமே பல செயன்முறைகளைச் செய்யக் கூடிய அளவுக்கு ஏகலைவர்களாகி விட்டோம்.

இன்னொருபுறம் பொருட்கள், சேவைகளின் பயன்பாட்டில் மறைமுகமாக இயக்கு கருவிகளாக இருந்தவை இன்று பன்மடங்கு திறன் மிக்கவையாக மாறி விட்டன. இன்னும் இன்னும் அவற்றின் மேம்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றது.

இந்த நிலையில் நம் தமிழ்ச் சமூகத்துக்கு AI குறித்த முழுமையானதொரு பரிமாணத்தை இதை மீறிக் கொடுக்க முடியுமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. முழுக்க முழுக்க AI வழியாகவே இந்த நூல் ஆக்கப்பட்ட செய்தியையும் சொல்லி, ஒரு முழுமையான அனுபவ வெளிபாட்டைக் காட்டி நிற்கின்றார் ஆசிரியர்.

இப்படியானதொரு அறிவியல் படைப்பைக் காலச் சூழலுக்கேற்ப உருவாக்கிய முகுந்தனுக்கும், அழகான கண் கவரும் படங்களை ஒவ்வொரு ஆக்கத்தின் பேசு பொருட்களுக்கும் கொடுத்த அபிலாஷ் மற்றும் அட்டைப்படத்தை உருவாக்கிய விமலாதித்தன், மற்றும் பிழையற மெய்ப்புத் திருத்தம் செய்த திவாகரி என்று இந்த நூல் முழுமைக்கும் திறமானதோர் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

இவ்வளவுதூரம் கடினமானதோர் முயற்சியை எடுத்து வழங்கியுள்ள அறிவியல் நூலை, பிரதியெடுக்கவும், அச்சிட்டு விநியோகிக்கவும் எல்லோருக்கும் அனுமதியைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டி நிற்பது ஒன்றே தான். “மற்றொருவர் கற்றுக்கொள்ள உதவுங்கள்.”

ஆகவே உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகம் இந்த நூலை பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரை பாவித்துப் பயனடைய உதவுங்கள்.

கானா பிரபா

பார்வையிட: https://book1.ai2all.org/

PDF: https://book1.ai2all.org/Ellorukkum-AI-book-1.pdf

​இலவசமாக அச்சுப்பிரதி பெற  ( இலங்கையில் மட்டும்) : http://ai2all.org/ellorukkum-ai-print-copy/

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...