Newsநியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

-

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022 இல் நடந்த இந்த சம்பவத்தில், அவர் தனது தொலைக்காட்சியை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளார்.

இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் தன் தாயை 15 கிலோ எடையுள்ள பூந்தொட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்று, நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தாக்குதலால் தாயின் மூளையின் மேற்பரப்பில் 40mm வெட்டு மற்றும் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், Mapp நீண்டகாலமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், பணம் கேட்பதால் தனது தாயுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகவும் தெரியவந்தது.

கொலை நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள Long Jettyல் உள்ள ஒரு அடகுக் கடைக்குள் Mapp நுழைவது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காணப்பட்டது. அங்கு அவர் தொலைக்காட்சி மற்றும் Whipper Sniper-ஐ $200க்கு விற்றுள்ளார். அதை அவர் போதைப்பொருள் வாங்கப் பயன்படுத்தியுள்ளர் என்பதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...