Tasmaniaடாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

டாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

-

டாஸ்மேனியாவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

greater Hobart-இல் உள்ள Percy தெருவில் இன்று காலை கழிவு ஒப்பந்ததாரரால் (garbage contractor) கண்டெடுக்கப்பட்ட உடல் 45 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் அவர் அதை ஒரு பொம்மை என்றே நினைத்ததாகவும், பின்னரே அது ஒரு நபருடைய உடல் என்றும் புரிந்துகொண்டதாக கழிவு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்த விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மேனியா காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கில் தெரிவித்தார்.

பெயர் வெளியிடப்படாத இந்த 45 வயது நபர் பல மாதங்களாக அவருடைய வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபரை அவரது குடும்பத்தினர் கடைசியாக சனிக்கிழமை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது எந்த காயங்களும் இல்லை என்றாலும், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை Percy தெரு பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...