Newsநச்சுப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய நீர்நிலை

நச்சுப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய நீர்நிலை

-

தெற்கு ஆஸ்திரேலியாவின் நீர்நிலைகளில் ஒன்றான Coorong தற்போது நச்சுப் பாசிப் பூப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.

Coorongல் மீன்கள் மற்றும் புழுக்கள் உட்பட இறந்த கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. கடற்கரையின் பிற பகுதிகளை முன்னர் பாதித்த பாசிப் பூக்களால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இறப்புகளுக்கான காரணம் குறித்த கூடுதல் சோதனைகளை மாநில விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட புயல்களால் இந்த பாசிப் பூக்கள் நுழைந்ததிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Eyre Peninsulaல் உள்ள Tumby விரிகுடா அருகே நூற்றுக்கணக்கான இறந்த கணவாய் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அடிலெய்டுக்கு அருகிலுள்ள லார்க்ஸ் விரிகுடாவிலும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. 

இந்தப் புதிய இடங்களில் கடல்வாழ் உயிரினங்களின் இறப்புகள் பாசிப் பூவுடன் தொடர்புடையதா என்பதை நிபுணர்கள் இப்போது சோதனை செய்து வருகின்றனர்.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...