Newsகுயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

-

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார்.

Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11 வயது சிறுமி தனது தலையணை உறையில் ஏதோ அசைவதாக தனது தந்தை Michael Bonney-இடம் கூறினார்.

Emily தன் திரைச்சீலைகள் தலையணை உறையில் உரசிக் கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆனால் அவள் தலையணையில் ஏதோ அசைவதைக் கவனித்தாள். பின் அப்பா அது என்னவென்று தேடினார்.

தந்தை Michael வெளியே எடுத்து தலையணை உறையை அகற்றியபோது, ​​உள்ளே இருந்த பாம்பு வெளியே விழுந்திருந்தது.

தனது தலையணையில் பாம்பைக் கண்டதும் சிறுமி அதிர்ச்சியடைந்தாள். அவளுடைய தந்தை பாம்பை அகற்ற பாம்பு பிடிப்பவரை அழைத்தார்.

சிறுமியின் தந்தை Michael Bonney கூறுகையில், தனது வீட்டு கதவில் இருந்த ஒரு சிறிய இடைவெளி வழியாக பாம்பு வீட்டிற்குள் நுழைந்ததாக நம்புவதாகக் கூறினார்.

இதற்கு முன்பு பாம்புகள் வீட்டிற்குள் நுழைந்த சந்தர்ப்பங்கள் இருந்திருந்தாலும், அவை எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை என்று சிறுமியின் தந்தை கூறியிருந்தார்.

இருப்பினும், குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அவர்கள் தூங்கும் இடங்களைத் தொடர்ந்து சரிபார்த்து சுத்தம் செய்வது மிகவும் முக்கியமாகும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...