Newsவெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

-

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் டொலர் தட்டுப்பாடாகும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய சட்ட ரீதியான வங்கி முறைமைகளுக்கு அப்பால் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமை ஊடாக பணப்பறிமாற்றம் இடம்பெறுகின்றமை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களினால் வெவ்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வங்கி முறைமையின் ஊடாக அன்றி சட்டத்திற்கு முரணான முறைமைகளைக் கையாளுதல் என்பன பிரதான காரணிகளாக மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஆளுனரின் கோரிக்கைக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ்மா அதிபரினால் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்து , குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேலும் பரந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர , சட்டத்திற்கு முரணான டொலர் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக 2006 இல 5 நாணய சுத்தீகரிப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளில் டொலரைப் பெற்றுக் கொண்ட முறைமையை அறிந்து கொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...