காணாமல் போன மூன்று குழந்தைகளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இந்த 3 குழந்தைகளும் 17 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்கள்.
மே 22 ஆம் திகதி மதியம் 1:00 மணியளவில் Gilberton பகுதியில் மூன்று குழந்தைகளும் கடைசியாகக் காணப்பட்டதாகவும், அவர்கள் ஒரு பெண்ணுடன் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன குழந்தைகள் Zayden, Izaha மற்றும் Noah என அழைக்கப்படும், முறையே 3 வயது, 16 மாதங்கள் மற்றும் 3 மாத வயதுடையவர்கள், அனைவரும் Black Forest பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் சுமார் 20 வயதுடையவர், சராசரி உடல் அமைப்பு மற்றும் நீண்ட பழுப்பு நிற முடி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 131 444 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.