Newsசூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

-

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சூரியன் 50 கோடி ஆண்டுகளில் அழியலாம் என்றும் அப்போது அது பூமியையும் அழித்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது நடப்பதற்கு இப்படிப் பூமி தூக்கியடிக்கப்படும் சம்பவம் நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமது Solar System அருகே கடந்து போகும் ஆகும் நட்சத்திரங்களால் பூமியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து பல ஆயிரம் computer modelகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் Icarus இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் Passing star முன்பு மதிப்பிட்டதை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் சுமாராகச் சூரியனின் நிறை அளவுக்கு இருந்தால், அது ப்ளூட்டோவுக்கு வெளியே இருக்கும் நமது சூரிய மண்டலத்தின் எல்லையாகக் கருதப்படும் Oort Cloud-ஐ கூட கணிசமாகச் சீர்குலைக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் மேலும், “அடுத்த நான்கு பில்லியன் ஆண்டுகளில், பூமியை கடக்கும் நட்சத்திரங்கள் தான் சுற்றுப்பாதை மாறுவதற்கான முக்கிய காரணமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் புளூட்டோ ஆகியவை முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானியலாளர்கள் Nathan Kip மற்றும் Sean Raymond ஆகியோர் கூறுகையில், “நமது சூரிய மண்டலத்தில் சில சிக்கல்கள் உள்ளன. பெரிய கிரகங்களின் சுற்றுப்பாதைகள் சில காரணங்களால் மாறலாம். கூடுதலாக, நமது கிரகங்கள் மற்றும் புளூட்டோ முன்பு நினைத்ததை விட மிகவும் நிலையற்றவையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால், புதன் கிரகம் தனது பாதையில் இருந்து விலகிச் செல்ல 50-80 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஐந்து பில்லியன் ஆண்டுகளில் புளூட்டோவும் இதுபோல விலகிச் செல்ல 5 சதவீதம் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், “அதேபோல செவ்வாய்க் கிரகம் வேறு கிரகத்தில் மோத அல்லது சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட 0.3% வாய்ப்பு இருக்கிறது. அதுபோல பூமி சூரியக் குடும்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட அல்லது வேறு கிரகத்தில் மோத 0.2 சதவீதம் வாய்ப்புள்ளது” என்றனர்.

ஒருவேளை பூமியை கடக்கும் நட்சத்திரத்தால் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை மாறினால், வீனஸ் அல்லது செவ்வாய் கிரகங்கள் பூமியுடன் மோதக்கூடும். வேறு சில சமயங்களில், பூமி சூரியனுடன் கூட மோதலாம்.. அல்லது வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பூமியை வியாழன் கிரகத்தை நோக்கித் தள்ளக்கூடும். அதன் பிறகு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைச் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...