டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, 9 வயது சிறுமியை அவரது தாயார் ஒரு காரின் பின் இருக்கையில் விட்டுச் சென்றுள்ளார்.
அந்தத் தாய், அந்தப் பெண்ணுக்கு உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்துவிட்டு, ஜன்னலைப் பாதி திறந்து வைத்திருந்தார்.
அன்று பிற்பகலில் வெப்பநிலை 36°C ஆக உயர்ந்ததாக ஹாரிஸ் கவுண்டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதியம் தாய் வந்தபோது, சிறுமியைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.