இந்த மாத இறுதியில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பயணிகளுக்கு இரண்டு நாட்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பை மாநில அரசு வழங்கியுள்ளது.
ஜூலை 31, வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை வரை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மாநிலத்தின் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
பல மாதங்களாக ரயில்வே வலையமைப்பில் ஏற்பட்ட இடையூறுகளால் சிரமத்தை எதிர்கொண்ட பயணிகளுக்கு வெகுமதியாக இந்த இலவச காலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ரயில்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி Matt Longland கூறுகையில், சுமார் 92% ரயில் ஊழியர்கள் அரசாங்கத்தின் புதிய ஊதிய சலுகையை ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், இது ஊழியர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
48 மணி நேர இலவசப் பயணத்தால் அரசாங்கத்திற்கு மொத்தம் 7 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.