டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 850க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
Heart O’ the Hills கோடைக்கால முகாமைச் சேர்ந்த 27 சிறுமிகள் இன்னும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் கூறுகையில், டெக்ஸான் மக்களுக்கு திடீர் வெள்ள எச்சரிக்கைகள் தாமதமாகவே கிடைத்தன.
மீட்புப் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருவதாக ஆளுநர் கிரெக் அபோட் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள பிற மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.