அமெரிக்காவுடனும் பிற நட்பு நாடுகளுடனும் தான் பெரிய அளவில் பங்கேற்கும் இராணுவப் பயிற்சிகளை சீனா உளவு பார்க்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த ‘Talisman Saber’ இராணுவப் பயிற்சியில், ஆஸ்திரேலியா உட்பட பப்புவா நியூ கினி வரை 19 நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசாங்க ஊடகமான ‘ABC’க்கு ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை மற்றும் பசுபிக் தீவு விவகார அமைச்சர் பேட் கான்ராய் பேட்டி அளித்தார்.
“சீனா கடந்த 2017 முதல் ‘Talisman Saber’ இராணுவப் பயிற்சியைக் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு அது கண்காணிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
“பயிற்சியைக் கண்காணிக்கும் சீன இராணுவத்தின் நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா அருகிலான அதன் நடமாட்டத்தையும் ஆஸ்திரேலியா உற்று நோக்கும்,” என்று அவர் கூறினார்.