கறுப்புச் சந்தையில் டஜன் கணக்கான கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
34 வயதான Grafton Kaifoto, குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியாவில் உள்ள முகவரிகளுக்கு 30 Glock-style கைத்துப்பாக்கிகளை தயாரிக்க போதுமான பாகங்களை அனுப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது .
அந்த பாகங்களிலிருந்து கைத்துப்பாக்கிகளை உருவாக்கி, ஒவ்வொன்றும் $20,000க்கு விற்க அவர் இலக்கு வைத்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இது நாட்டின் மிக முக்கியமான துப்பாக்கி எல்லை இடைமறிப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்டுள்ளது.
ஜூன் 26 அன்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்த பிரிஸ்பேர்ண் சர்வதேச விமான நிலையத்தில் Kaifoto-ஐ AFP தடுத்து நிறுத்தியது .
அமெரிக்காவிலிருந்து வந்த ஒன்பது சரக்குக் கப்பல்களுக்கான சரக்குப் பத்திரங்கள் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவற்றில் துப்பாக்கி பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
AFP-க்கு அறிவிக்கப்பட்டு, பார்சல்கள் முகவரிகளுக்கு டெலிவரி செய்யப்படுவதற்கு முன்பே இடைமறிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டதிலிருந்து Kaifoto அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்பதுடன் துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒன்பது குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.