Newsமாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி - Annabelle சாபமா?

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

-

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annabelle திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த Annabelle பொம்மை திடீரென மாயமானதாக சமீபத்தில் இணையத்தில் வதந்திகள் பரவின.

பொதுவாக Warrens Occult அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இந்த பொம்மை, கடந்த மே மாதம் லூசியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில் பொம்மை காணாமல் போய்விட்டதாக வதந்தி கிளம்பியது. இதை மறுத்த Dan Rivera, இணையத்தில் வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் அதிர்ச்சியாக, கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள ஹோட்டல் அறையில் Dan Rivera உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “மரணத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்குரிய எந்த ஆதாரமும் இல்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்துக்குப் பிறகு, இணையவாசிகள் “Dan Rivera மரணத்திற்கு Annabelle பொம்மை தொடர்புண்டா?” என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், Annabelle பொம்மை பாதுகாப்பாக இருப்பதாக TikTok வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும்  ஒக்டோபரில் இல்லினாயில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் Annabelle பொம்மை பங்கேற்கும் எனவும் அறிவித்திருந்தார்.

Latest news

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

சாலை விதிகளில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாரா?

2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், ஓட்டுநர் பயிற்சியின் புதிய...

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...