வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான Ha Long விரிகுடாவில் ஒரு பயணக் கப்பல் கவிழ்ந்ததில் 34 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிற பயணிகளைக் காணவில்லை.
தற்போது நிலவும் கடும் புயல் காரணமாக கப்பல் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன பயணிகள் மற்றும் பணியாளர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் 11 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது .
அந்தக் கப்பலில் 48 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் உட்பட 53 பேர் இருந்ததாக வியட்நாமிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இறந்த சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடற்படை, எல்லைக் காவல்படை, காவல்துறை மற்றும் துறைமுக அதிகாரிகள் 27 படகுகள் மற்றும் இரண்டு மீட்புக் கப்பல்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
அதிசயக் கடல் என்று அழைக்கப்படும் இந்தக் கப்பலில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது .