மலேசியாவிலிருந்து தப்பிச் சென்ற பெரிய அளவிலான ஊழல் சந்தேக நபர் சீனாவில் வசித்து வருவதாகவும், போலி ஆஸ்திரேலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
1Malaysia Development Berhad (1MDB) ஊழலை அம்பலப்படுத்திய புலனாய்வு நிருபர்கள், Jho Low என்ற அந்த நபர், Constantinos Achilles Veis என்ற புனைப்பெயரில் சீனாவில் வசிப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) இது குறித்து அறிந்திருக்கிறதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மலேசியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கின் பின்னணியில் சூத்திரதாரி என்று கூறப்படும் Jho Low ஆவார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் Najib Razak, அவர் நிறுவிய இறையாண்மை செல்வ நிதியமான 1Malaysia Development Berhad (1MDB) தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான பின்னர் 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மலேசிய மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, மலேசிய வரி செலுத்துவோருக்கு $6.8 பில்லியன் மோசடி செய்த ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு Najib-இற்கு உதவியதாக Jho Low மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.