ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு அரிய வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து சுகாதார ஆணையம், மெட்ரோ தெற்கு பகுதியில் Mpox (monkeypox) Clade 1 எனப்படும் ஒரு வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் Clade 1 மாறுபாடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேலும் இது குயின்ஸ்லாந்தில் முதல் முறையாகப் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இருக்கும் இடம் மற்றும் தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக குயின்ஸ்லாந்து சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
Mpox என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது.
இந்த தொற்று தோலில் கொப்புளங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் Paul Griffin கூறுகிறார்.
அதிக காய்ச்சல், தலைவலி, தசை வலி, வீங்கிய நிணநீர் முனைகள் அல்லது சோர்வு போன்ற பிற அறிகுறிகளும் இருக்கலாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.