பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் உள்ள பாடசாலையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்த போது, அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI விமானம் பாடசாலையில் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ஜெட் விமானம் மோதியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில் 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.