NewsJeju விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

Jeju விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

-

179 பேரை பலிகொண்ட தென் கொரிய விமான விபத்துக்கு விமானியின் தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பரில் நிகழ்ந்த Jeju விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பறவைகள் மோதியதால் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் சேதமடைந்த போதிலும், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானிகள் குறைந்த சேதம் அடைந்த எஞ்சினை செயலிழக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது.

தென் கொரிய விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே விபத்து விசாரணை வாரியம், விமானத்தின் இயந்திரங்கள் குறித்த தனது விசாரணையின் முடிவுகளை கடந்த வார இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கடும் எதிர்ப்புகள் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.

டிசம்பர் 29 ஆம் திகதி முவான் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் கியரை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த 179 பேர் இறந்தனர், இரண்டு பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...