தாய்லாந்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் Smartraveller சேவை, Chanthaburi மற்றும் Trat மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது.
அந்தப் பகுதிகளில் இராணுவச் சட்டம் அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கம்போடிய எல்லையைத் தாண்டி Buriram, Si Saket, Surin மற்றும் Ubon Ratchathani மாகாணங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் முன்னதாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
கம்போடியாவின் எல்லை மாகாணங்களான Preah Vihear மற்றும் Oddar Meanchey ஆகியவற்றிற்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் Smartraveller சேவை அறிவுறுத்துகிறது.
இந்தப் பகுதிகள் இராணுவத் தாக்குதல்கள், வன்முறை மற்றும் கண்ணிவெடிகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளன. மேலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள எல்லைக் கடவைகளும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது, அங்கு அனைத்து உறுப்பு நாடுகளும் போரை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டன.