கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நினைவு நாணயம் வெளியிட்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சி நடத்தினார். அவரது “ஓம் சிவோஹம்” பாடல் முடிந்ததும் பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியை இளையராஜா இசைத்தார். பார்வையாளர்கள் மெய்மறந்து ரசித்துள்ளனர். பிரதமர் மோடியும் அதனை ரசித்து பார்த்துள்ளார்.
இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா, “வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” எனக் கூறினார்.