காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
என்கிளேவின் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,870 என்றும், ஆயிரக்கணக்கானோர் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பகுதிகளின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அடுத்தடுத்த வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் காஸாவில் உள்ள முழு சுற்றுப்புறங்களையும் தரைமட்டமாக்கியுள்ளன.
2.3 மில்லியன் மக்கள்தொகையில் பெரும்பகுதியானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மேலும் அந்த பகுதியை பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.