காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர்.
இஸ்ரேலிய காவலில் இருந்த Tan Safi மற்றும் Robert Martin ஆகியோர், இஸ்ரேலிய அதிகாரிகளால் எல்லா வகையிலும் கொடூரமாக நடத்தப்பட்டதால், தாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு சிறிய அளவு உணவு வழங்கப்பட்டதாக அவர்கள் இருவரும் ஊடகங்களுக்கு விளக்கினர்.
21 சமூக ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற கப்பல், காசா கடற்கரையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் இருந்ததாக அதிகாரப்பூர்வ கடல்சார் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
கைது செய்யப்பட்டு இஸ்ரேலின் கிவோன் சிறையில் பல நாட்கள் அடைக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஜோர்டானுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இது ஒரு பாதுகாப்பு சூழ்நிலையாகக் கருதப்படுவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.