Bass Straitயில் காணாமல் போன இலகுரக விமானத்தைத் தேடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
கடந்த சனிக்கிழமை டாஸ்மேனியாவில் உள்ள George Town விமான நிலையத்திலிருந்து இரண்டு பேர் மற்றும் ஒரு நாயை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டது.
அந்த விமானம் நியூ சவுத் வேல்ஸில் உள்ள Hillston விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், விமானி அதிகாரிகளுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை என்று கூறினார்.
டாஸ்மேனியா மற்றும் விக்டோரியாவின் சில பகுதிகள் தேடப்பட்டு வருகின்றன. இன்று ஒரு AMSA விமானமும் ஒரு டாஸ்மேனியா போலீஸ் ஹெலிகாப்டரும் பாஸ் நீரிணை மற்றும் வடக்கு டாஸ்மேனியாவின் ஒரு பகுதியைத் தேடுகின்றன.
தகவல் தெரிந்தவர்கள் AMSA மறுமொழி மையத்தை 02 6279 5700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு டாஸ்மேனியா காவல்துறை கேட்டுக்கொள்கிறது.