ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும் பயணிகள் அட்டை முறையின் மூலம், நியூசிலாந்தின் ஆக்லாந்து அல்லது குயின்ஸ்டவுனில் இருந்து வரும் பயணிகள் டிஜிட்டல் உள்வரும் பயணிகள் அட்டையை ஆன்லைனில் நிரப்ப முடியும்.
அதன்படி, சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்கள் பெறும் QR குறியீட்டை சிட்னி விமான நிலைய எல்லை மற்றும் உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டு புறப்படலாம். இந்த வாய்ப்பு Qantas விமானங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் Qantas செயலி மூலம் அணுகலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், சிட்னிக்கு வரும் மக்களை விமான நிலையத்திலிருந்து விரைவாக வெளியேற்றுவதும், விமானப் பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதும் ஆகும்.





