நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்கிலிருந்து ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக காவல்துறை கவலை வெளியிட்டுள்ளனர்.
Orange-இல் இருந்து வடமேற்கே சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Molong-இன் Ridell தெருவில், ஒரு வயது Hariet Kamlade கடைசியாக நேற்று மாலை 5 மணிக்குக் காணப்பட்டார்.
Hariet, Caucasian தோற்றம் கொண்டவர் என்றும், சுமார் 70 செ.மீ உயரம் கொண்டவர் என்றும், பொன்னிற முடி மற்றும் நீல நிற கண்கள் கொண்டவர் என்றும் விவரிக்கப்படுகிறது.
கடைசியாக அவள் இளஞ்சிவப்பு நிற மேலாடையுடன் நீலம் அல்லது சாம்பல் நிற பேன்ட் மற்றும் வெள்ளை காலணிகளை அணிந்திருந்தாள்.
குறித்த குழந்தையுடன் ஒரு ஆணும் பெண்ணும் இருந்து இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.
அந்த நபர் 60 வயதுடையவர் என்றும், Caucasian தோற்றம் கொண்டவர் என்றும், சுமார் 175 செ.மீ உயரம் கொண்டவர் என்றும், நடுத்தர உடல் அமைப்பு கொண்டவர் என்றும், குட்டையான நரைத்த முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என்றும் விவரிக்கப்படுகிறது.
அந்தப் பெண் 30 வயதுடையவர் என்றும், Caucasian தோற்றமுடையவர் என்றும், சுமார் 170 செ.மீ உயரம், மெல்லிய உடலமைப்பு, கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என்றும் விவரிக்கப்படுகிறது.
ஹரியட் அந்த ஆணும் பெண்ணும் Dubboவுக்குப் பயணம் செய்திருக்கலாம், இன்னும் இந்தப் பகுதியில் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தக் குழந்தையின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 1800 333 000 என்ற எண்ணில் காவல்துறை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.