Breaking Newsபிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

-

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டன் அரச தம்பதி மறைந்த பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத்தின் மறைவை அடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த மன்னரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். எனினும் இன்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3 ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952 இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா்.

இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். ராணியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது.

ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, ராணியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா்.

இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி தனது 99 ஆவது வயதில் காலமானாா்.

Latest news

Whatsapp-இல் அறிமுகமாகும் Chat-GPT

Meta நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான Whatsapp இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் Whatsapp சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300...

கிறிஸ்மஸ் கேக் சாப்பிட்ட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரேஸிலில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த கேக்கில் ஆர்சனிக் எனப்படும் ஒரு இரசாயண...

அதிக நோபல் பரிசுகள் பெற்ற நாடுகளில் ஆஸ்திரேலியாவின் நிலை என்ன?

2024க்குள் ஒவ்வொரு நாடும் பெறும் நோபல் பரிசுகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நோபல் பரிசுகளின் எண்ணிக்கை 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில்...

விக்டோரியா காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவு பற்றி வெளியான அறிக்கை

விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிராமியன் தேசிய பூங்காவில் பரவி வரும் காட்டுத் தீயால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிளாக் கோடை காட்டுத் தீ...

புத்தாண்டைக் கொண்டாட மெல்பேர்ணியர்கள் செல்ல வேண்டிய இடங்கள்

புத்தாண்டைக் கொண்டாடும் மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள், நேரலையில் அனுபவிக்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று, பட்டாசு காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதுமட்டுமின்றி சிட்னி...

அதிக நோபல் பரிசுகள் பெற்ற நாடுகளில் ஆஸ்திரேலியாவின் நிலை என்ன?

2024க்குள் ஒவ்வொரு நாடும் பெறும் நோபல் பரிசுகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நோபல் பரிசுகளின் எண்ணிக்கை 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில்...