விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம் மூடப்பட்டது.
Noojee Trestle பாலம் 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 21 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் இது 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு மரப் பாலமாகும். இது 1954 வரை மரங்களை கொண்டு செல்வதற்கான ரயில் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது, Noojee ரயில் பாதை மக்கள் நடந்து செல்லவும், மிதிவண்டி ஓட்டவும் திறக்கப்பட்டுள்ளது.
Noojee கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள Noojee Trestle பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் இந்த கோடையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பார்வையாளர்கள் வரலாறு, அழகு மற்றும் ஓய்வெடுக்கும் அனுபவத்தை ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும்.