தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் பரவியுள்ள கடும் மூடுபனி காரணமாக அடிலெய்டு சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மேலும் தாமதமாகியுள்ளன.
இதனால் பயணிகள் நீண்ட தாமதங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூடுபனி காரணமாக பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, டென்பசாரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் மெல்போர்னுக்கும், கோலாலம்பூரிலிருந்து வந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சிட்னிக்கும் திருப்பி விடப்பட்டது.
அடிலெய்டில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானம் காலை 8:00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அது காலை 9:45 மணிக்கு புறப்படும் என்றும் குவாண்டாஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
அடிலெய்டில் இருந்து டென்பசருக்குச் செல்லும் ஏர்ஏசியா விமானம் நான்கு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு காலை 11.10 மணிக்குப் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலைமை எதிர்கால விமானங்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களிடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.