குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி அமைச்சர் Jason Clare மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி அமைச்சர் Jess Walsh ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் $190 மில்லியன் குழந்தை பராமரிப்பு சீர்திருத்தத்தை அறிவித்தது.
இதன் கீழ், குழந்தை பராமரிப்பு மையங்களில் தேசிய பணியாளர் பதிவேடு மற்றும் CCTV அமைப்பும் தொடங்கப்பட உள்ளன.
அதன் கீழ், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும் CCTV சோதனைக்கு அரசாங்கம் $189 மில்லியன் நிதியை வழங்கும்.
தொழிலாளர்களுக்காக நிறுவப்படும் தேசிய பதிவேட்டில், விசாரிக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட ஊழியர்கள் பற்றிய தகவல்கள் முதல் பரந்த அளவிலான தரவுகள் அடங்கும்.
புதிய ஊழியர்கள் முதல் தலைமை நிர்வாக அதிகாரிகள் வரை அனைத்து ஊழியர்களும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் உள்ள அனைத்து பலவீனங்களையும் சரிசெய்வதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும், அவை ஒரு முக்கியமான முன்னேற்றப் படியாகும் என்று அமைச்சர் Clare கூறுகிறார்.