தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு கட்சி துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரையில் திரண்டனர், மாநாடு மாலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கினர்.
கடுமையான வெயிலில் அமர்வதற்கு நிழல் வசதி கூட இல்லாததால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த சில தொண்டர்கள் கடுமையான உடல் நலக்குறைவுக்கு ஆட்பட்டனர்.
மேலும் செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரபாகரன், நீலகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் நிர்வாகிகள் 3 பேர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.