ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் வேலை செய்யும் நாய்களுக்கான தேவை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உயர்தர வேலை செய்யும் நாய்க்கு விவசாயிகள் $15,000 க்கும் அதிகமாக பணம் கொடுக்கத் தயாராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் 270,000 நாய்களின் மதிப்பு, நாட்டின் பொருளாதாரத்திற்கு, 2023-24 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் ஆஸ்திரேலியா ஈட்டிய வருவாய்க்கு சமம் என்று ஆராய்ச்சி மதிப்பிடுகிறது.
இது ஊழியர்களின் செலவில் $800 மில்லியன் மிச்சப்படுத்தும் என்று ANZ வேளாண் வணிகத்திற்கான நிர்வாக இயக்குனர் மைக்கேல் வைட்ஹெட் கூறுகிறார்.
கிராமப்புற நகரங்களுக்கு சுமார் $600 மில்லியன் வருவாயை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டில், மேற்கு விக்டோரியாவில் நடந்த Casterton kelpie ஏலத்தில் ஒரு நாய் சாதனை அளவில் $35,200க்கு விற்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில், நியூ சவுத் வேல்ஸில் ஒரு நாய் $49,000க்கு விற்கப்பட்டு, அந்த சாதனையை முறியடித்தது.