மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள St Kilda Pier அருகே ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
அந்தப் பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
குற்றம் நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் குறித்த பெண்ணின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.