ஆஸ்திரேலியாவில் உள்ள Spotify Premium வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர சந்தாக்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செலவிடுவார்கள். ஏனெனில் இசை streaming நிறுவனமான Spotify வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு குறித்துத் தெரிவித்தது.
இந்த மாதம் Spotify-யிலிருந்து சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது அடுத்த billing சுழற்சியில் அவர்களின் மாதாந்திர சந்தா செலவு உயர்த்தப்படும் என்பதைத் தெரிவிக்கிறது.
அடிப்படைத் திட்டத்தின் விலை $13.99 இலிருந்து $15.99 ஆக உயர்த்தப்பட்ட பிறகு, தனிப்பட்ட சந்தாதாரர்கள் மாதத்திற்கு $2 கூடுதலாகச் செலுத்துவார்கள், இது 14.2 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
Premium Duo சந்தாதாரர்களுக்கு Spotify-இலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது அவர்களின் மாதாந்திர சந்தா மாதத்திற்கு $19.99 இலிருந்து $22.99 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கிறது. அது 15 சதவீத சற்று பெரிய அதிகரிப்பாகும்.
மிகவும் விலையுயர்ந்த அடுக்கான family plan, மாதத்திற்கு $23.99 இலிருந்து $27.99 ஆக 16.6 சதவீதம் உயர்ந்து இருக்கும்.
இதற்கிடையில், மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் Spotify திட்டமான student plan, $6.99 இலிருந்து $7.99 ஆக, மொத்தம் 14.3 சதவீதமாக $1 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.