Newsஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

-

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 ஒக்டோபரிலும், மெல்பேர்ண் நகரத்தில் யூதக் கோயில் மீது கடந்த 2024 டிசம்பரிலும், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களை, ஈரான் அரசுதான் இயக்கியுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை ஆஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுவதாகவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இத்துடன், ஆஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி வெளியேற்றப்படுவார் எனவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்புமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ஈரானில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்படலாம் எனவே உடனடியாக வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க பிரதமர் அல்பானீஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...