அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் தேவாலய வழிபாட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கோடை விடுமுறையிலிருந்து திரும்பியதிலிருந்து பள்ளி தொடங்கிய மூன்றாவது நாளில், Annunciation Catholic பள்ளியில் குழந்தைகள் இருக்கைகளில் அமர்ந்திருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
துப்பாக்கிதாரி, பின்னர் தேவாலயத்திற்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பலியான இருவரும் 8 மற்றும் 10 வயதுடையவர்கள். மேலும் 17 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் குழந்தைகள். காயமடைந்த குழந்தைகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பல பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
