Newsபூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

பூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

-

பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5 பில்லியன் டொலர் மதிப்புமிக்கத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

நிலாவின் தோற்றத்தில் அமையக்கூடிய அந்த உல்லாசத் தலம் விண்வெளிச் சுற்றுப்பயணத் தலமாகவும் விளங்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையங்கள் பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உல்லாசத் தலத்திற்குச் செல்லும் வருகையாளர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இரவுக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உல்லாசத் தலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியும் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலாவின் தோற்றத்தைக் கொண்ட உல்லாசத் தலத்தை மற்ற இடங்களிலும் கட்ட Moon World Resorts எண்ணம் கொண்டுள்ளது. அதுகுறித்து உலகக் கண்காட்சி ஒன்றை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...