ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ணில் உள்ள ஒரு புனித பழங்குடி முகாம் தளத்தை Neo-Naziக்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் நான்கு பேர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
CBD-யில் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றதை அடுத்து, Kings Domain-இல் உள்ள Camp Sovereignty-ஐ நோக்கி ஒரு குழு மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தியது.
Neo-Naziக்கள் இளம் பெண்கள் உட்பட பழங்குடியினரைத் தாக்கி, கொடிகளைப் பறித்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பிரபல neo-Nazi and white nationalist Thomas Sewell, குற்றச்சாட்டின் போது கூட்டத்தில் காணப்பட்டார்.
Camp Sovereignty-இல் மக்களைத் தாக்கியதாகக் கூறப்படும் மேலும் நான்கு பேர் மீது போலீசார் இன்று குற்றம் சாட்டியுள்ளனர்.
துப்பறியும் நபர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு வருகின்றனர். தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற எண்ணில் Crime Stoppers-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.