Newsசெங்கடல் பகுதியில் இணைய கேபிள்கள் துண்டிப்பு

செங்கடல் பகுதியில் இணைய கேபிள்கள் துண்டிப்பு

-

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் இணைய சேவைகளைக் கண்காணிக்கும் Netflix நிறுவனம் தெரிவிக்கையில், ‘செங்கடலில் ஏற்பட்ட தொடா் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்குக் காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

இதற்குப் பின்னணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இணையதள சேவைக்கான கேபிள் துண்டிப்பை உறுதி செய்த அவர்கள் இதனை நாங்கள் செய்யவில்லை என மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செங்கடல் பகுதியில் 100இற்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினர். இதுவரை 4 கப்பல்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...