Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம் மற்றும் 5.5kW inverter-ஐ $6,999க்கு வாங்கலாம். அதே நேரத்தில் 20kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம் மற்றும் 5.5kW inverter-ஐ $8,499க்கு வாங்கலாம்.
இந்த தொகுப்புகள் மின் தடை பாதுகாப்பு மற்றும் 10 வருட உத்தரவாதத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. சோலார் பேனல்களை நிறுவுவதற்கான செலவும் தொகுப்பிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது 25 வருட சோலார் பேனல் செயல்திறன் உத்தரவாதத்துடன் வருகிறது.
முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலியான Aldi, விக்டோரியாவில் ஒரு புதிய சூரிய ஆற்றல் தொகுப்பை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நியூ சவுத் வேல்ஸ்/குயின்ஸ்லாந்து மற்றும் பிற பெருநகரப் பகுதிகளில் (ACT) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது ஆஸ்திரேலிய வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும், குறிப்பாக மின்தடையின் போது நம்பகமான ஆற்றலை வழங்கவும் உதவும்.