தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு நாள் ஐக்கிய இராச்சியப் பயணத்தின் போது நடந்த இந்தச் சந்திப்பு, பாசிப் பூக்கும் நெருக்கடி மற்றும் Whyalla Steelworks உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையில் சர்வதேச முதலீட்டைப் பாதுகாப்பதிலும், AUKUS திட்டத்திலும் பிரதமரின் இங்கிலாந்து பயணம் முதன்மையாக கவனம் செலுத்தியது.
இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய விளைவாக தெற்கு ஆஸ்திரேலியாவிற்கும் Rolls-Royce-இற்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது, இது AUKUS திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பு லண்டனில் நடந்தாலும், தெற்கு ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு COP காலநிலை மாநாட்டை நடத்தினால், பிரதமருக்கும் மன்னருக்கும் இடையே அடிலெய்டில் எதிர்கால சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அடிலெய்டில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு முன்னுரிமையாக உள்ளது. வரும் வாரங்களில் பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கும் துருக்கியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு உட்பட மேலும் விவாதங்கள் நிலுவையில் உள்ளன.